• Jul 01 2024

இரண்டு நாட்களில் 300 கோடியை எட்டிவிட்டதா கல்கி ? படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Nithushan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வந்தாலும் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கல்கி ஆகும் குறித்த படம் வெளியாகி எவரும் எதிர்பார்க்காத அளவு வசூலை குவித்து வருகின்றது.


கல்கி 2898 AD என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய  திரைப்படம் ஆகும். நாக் அஸ்வின் இயக்கும் குறித்த படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , பிரபாஸ் , தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த படம் வெளியாகிய முதல் நாளிலேயே 195 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில் கல்கி திரைப்படம் இரண்டு நாட்களில் 298 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வெற்றிகரமாக திரையிடப்படும் குறித்த திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்டுகின்றது. 



Advertisement

Advertisement