• Jun 27 2024

லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் தான் இல்லை, ஆனால் விஜய்யின் குட்டிக் கதை இருக்கு- படக்குழு போட்ட புதுப் பிளான்

stella / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் தற்பொழுது லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தாகியுள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக டிக்கெட்டுகளுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், ஓவர் கிரவுட் ஆகி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என்பதால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையே ரத்து செய்யப் போவதாக தயாரிப்பு நிறுவனம் சொன்ன காரணத்தை ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்கவில்லை. 


இந்தியா முழுவதும் பல படங்களில் பிசியாக இருக்கும் அனிருத் ஆடியோ லாஞ்சுக்காக தீயாக வேலை செய்து வந்த நிலையில், லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து என தெரிந்த நிலையில், செகண்ட் சிங்கிளையாவது சீக்கிரமே ரசிகர்களுக்கு கொடுத்து விடலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் அதிரடியாக செகண்ட் சிங்கிளும் விரைவில் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் ஸ்பெஷல் பேட்டியையும் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கவும் லியோ படக்குழு ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பாக தளபதி விஜய்யின் பேச்சு தான் அந்த படத்தின் புரமோஷனையே உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதால், கண்டிப்பாக பேட்டியை ரெடி செய்யும் பணிகளையும் ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement