தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ரவி மோகன், ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.. இவருடைய நடிப்பில் இறுதியாக காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
ரவி மோகன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சந்தோஷமாக தமது திருமண வாழ்வை வாழ்ந்து வந்த போதும் திடீரென இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
d_i_a
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை திடீரென முடிவுக்கு வர பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. ரவி மோகனுடன் ஆர்த்தி சேர்ந்து வாழ்வதற்கு ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்த போதும் அதன் பின்பு இருவரும் தத்தமது முடிவில் உறுதியாக உள்ளார்கள்.
இந்த நிலையில், ஆர்த்தியிடம் விவாகரத்து கேட்டு ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ரவி மோகன் ஆர்த்தி ஆகிய இருவரும் சமரச தீர்வு மையத்திற்கு ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் ரவி மோகன் ஆர்த்தி ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகினர்.
இறுதியில் சமரச பேச்சு வார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் என வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
Listen News!