பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நண்பனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்பதும் அங்கு பாஜக கூட்டணியில் போட்டியிடும் பவன் கல்யாண் ஆதரவாக அவரது அண்ணன் மகன் அல்லு அர்ஜுன் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
அதுமட்டுமின்றி அல்லு அர்ஜுன் நெருங்கிய நண்பரான ஷில்பா ரவி என்பவர் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவருக்கும் அல்லு அர்ஜுன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் நேற்று ஷில்பா ரவி வீட்டிற்கு அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரை காண ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் அவர் ஷில்பா ரவியின் கையை தூக்கி காண்பித்து இவருக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்றும் இவர் எனது நெருங்கிய நண்பர் என்றும் அவருக்கு உதவி தேவைப்பட்டால் எப்போதும் அவருக்காக வந்து நிற்பேன் என்றும் அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அல்லு அர்ஜுனை பார்த்த சந்தோஷத்தில் கோஷமிட்ட நிலையில் ஆந்திரா தேர்தல் களத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித அனுமதியும் இன்றி ஏராளமான ரசிகர்களை ஒரே இடத்தில் சேர்த்ததாக கூறி அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!