ஆகஸ்ட் 1, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. ஒரே நாளில் ஏழு திரைப்படங்கள் திரைக்கு வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் படம், ‘ஹவுஸ்மேட்ஸ்’. ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், வினோதினி, காளி வெங்கட், ஆஷா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம், ஒரு அழுத்தமான குடும்ப மற்றும் ஹ்யூமர் கலந்த என்டர்டைன்மென்ட் கதையாக உருவாகியுள்ளது. படம் தொடர்பான புரொமோஷன்கள் மிக வேகமாகவும், பல்வேறு ஊடகங்களில் பிஸியாகவும் நடைபெற்று வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்து, யோகி பாபு, அஜ்மல், உதயா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படம், ஒரு குற்ற விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் புழல் சிறையில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Realistic ஆக இருக்கும்படி உருவாகியிருக்கும் இந்த படம், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது படமாக, விஜயசேகரன் இயக்கியுள்ள ‘போகி’ திரைப்படம் வருகிறது. இதில் நம்பி நந்தி, சுவாசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு மனிதன் கடந்த கால நினைவுகளுக்குள் பயணிக்கும்போது எதிர்கொள்ளும் உணர்ச்சிகளை காட்சிப்படுத்தும் படமாக இது உருவாகியுள்ளது.
இதே நாளில், மாறன் இயக்கியுள்ள ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, தேஜு அஸ்வினி ஜோடியாக நடித்துள்ளார். பெயரை போலவே, ஒரு சிக்கலான பிளாட்டில், ஒருவரின் வாழ்க்கையை பிளாக்மெயிலிங் மூலம் மாற்றும் கதையைப் பதிவு செய்கிறது. ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு இது ஒரு கமெர்ஷியல் ஹிட் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும், வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘முதல் பக்கம்’ திரைப்படமும் வெளியாகிறது. இது காதல், காமெடி மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு யூனிக் சினிமா.
இவற்றுடன், பிக் பாஸ் பிரபலம் தர்ஷன், முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், சுஜித் சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ ‘சரண்டர்’ திரைப்படமும் வெளியாகிறது. சமூக நீதியையும், பொலிஸ் மற்றும் குற்றவாளிகளுக்கிடையிலான தற்காப்பு வேதனையையும் கேள்விப்படுத்தும் ஒரு படமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. இடைவேளை இல்லாமல், அசுரன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த டிஜே அருணாச்சலம் கதாநாயகனாக நடித்துள்ள ‘உசுரே’ திரைப்படமும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. உணர்ச்சிகரமான குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
Listen News!