• Jun 16 2024

தீபாவளியை குறிவைக்கும் 5 முக்கிய படங்கள்! அஜித் ,சூர்யாவுக்கு சவால் விடும் இளம் நடிகர்கள்!

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றே ஆகும். அதுவும் பொங்கல் , தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களை தெரிவு செய்வர். அவ்வாறே இம்முறை தீபாவளியை பல திரைப்படங்கள் குறி வைக்கின்றனர். 


திரைப்படங்களை வெளியிடுவதற்கென்றே ஒரு சில விடுமுறை நாட்களை தயாரிப்பாளர்கள் எதிர்பாக்கின்றனர். அவ்வாறே தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளியானது அனைவர்க்கும் உகந்த நாளாக காணப்படுகின்றது. இதனால் பல முக்கிய நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் காணப்டுகின்றது.


அவ்வாறே அஜித் சமீபத்தில் நடித்து வரும் விடாமுயற்சி, சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாக்கிய கங்குவா , சிவகார்த்திகேயன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் sk 23 , கவின் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் பிளடி பகர் இவற்றுடன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் எல் .ஐ .சி திரைப்படமும் இணைகிறது. அஜித் , சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் சிவகார்த்திகேயன் , கவின் , பிரதீப் போன்ற இளம் நடிகர்கள் போட்டியிடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது   

Advertisement

Advertisement