• Jan 19 2025

உலக நாயகனின் 'தக் லைஃப்' கூட்டணியில் இணைந்த 2 பிரபலங்கள்! மரண மாஸ் தகவல் இதோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'தக் லைஃப்'. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன

இந்தப் படத்தின் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.


அதாவது, ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் மேலும் 2 நடிகர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ் திரை உலகின் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.


மேலும் பிரபல மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் அவர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். இவ்வாறு இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ள காரணத்தினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பான் இந்திய திரைப்படமாகவும் மல்டி ஸ்டார் படமாகவும் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement