• May 02 2024

'படத்தில் பாடுவதற்கு வாய்ப்புத் தருவதாக யுவன் சங்கர் ராஜா சொன்னார்'- சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னர் கிரிஷாந்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் சீசன் 8. இந்த நிகழ்ச்சியானது கடந்த வாரம் தான் முடிவடைந்தது. அதன்படி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக கிரிசாந் தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் வென்றார்.

இவ்வாறு டைட்டில் வின்னர் ஆன கிரிசாந் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது இப்ப ஆறாம் வகுப்பு படிக்கப் போறேன். எனக்கு பாடத் தெரியும் என்பதே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. நான், அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் கும்பகோணத்துக்கு காரில் போயிட்டு இருந்தோம். அப்ப கார்ல ஒரு பாட்டு பிளே ஆச்சு. அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால அதே மாதிரி பாட முயற்சி பண்ணி பாடுனேன். அப்படித்தான் எனக்குள் இருக்கிற திறமையை கண்டு பிடிச்சேன்!

சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு வரும்போது எனக்கு மூணு பாட்டு மட்டும்தான் தெரியும். கொஞ்ச, கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆடியோ வடிவில் தொடர்ந்து பல பாடல்களை கேட்டு முறையா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன். டைட்டில் வின் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு

எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டே பாட்டும் பாடிட்டு இருந்தேன். ஒருமுறை சித்ரா அம்மாவுடைய ரூமிற்கு போயிருந்தேன். அம்மா ஒரு மருந்து கொடுத்தாங்க. அந்த மருந்தை சாப்பிட்ட பிறகு ஃபீலிங் பெட்டரா இருந்துச்சு. எனக்கு பல ஊர்களுக்கு போய் வித்தியாசமான உணவுகளை டேஸ்ட் பண்ண பிடிக்கும் என்றவரிடம் டைட்டில் வின் பண்ணின மொமண்ட் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

எனக்கு அந்த மொமென்ட் ரொம்பவே ஸ்பெஷல். டைட்டில் வின் பண்ணிட்டேன்னு சொல்லும்போதுகூட சிரிச்சிட்டு சந்தோஷமாதான் நின்னுட்டு இருந்தேன். அந்த பரிசை யுவன் சார் கொடுத்துட்டு என்கிட்ட நிச்சயம் படத்துல பாடுறதுக்கு வாய்ப்பு கொடுக்கிறதா சொன்ன உடனே எனக்கு அழுகை வந்துடுச்சு!

எஸ்பிபி சாரை நான் ஞாபகப்படுத்துறேன்னு சரண் சார் அடிக்கடி சொல்லுவார். அதனால தான் `குட்டி டாடி'ன்னு செல்லமா என்னை கூப்பிடுவாரு. அவர் அப்படி சொல்லும்போதெல்லாம் நாம இதுக்கு தகுதியான நபரான்னு என்னை நானே கேட்டுப்பேன்.. இப்ப வரைக்கும் அந்த தகுதி எனக்கு இருக்கான்னு தெரியாது. ஆனா, நிச்சயம் அவர் மாதிரி ஆக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்!' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement