• May 10 2024

மீனாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அமைச்சர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

90s காலத்தில் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை மீனா, நடிகை மீனா என்று சொல்வதைவிட கண்ணழகி மீனா என்று அறிந்தவர்கள் பலர். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 12 பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் இவர்களுடைய திருமணத்திற்கு உறவினர்கள்,நண்பர்கள் , திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மீனா வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வார காலமாக உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலை இருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 27 இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.

இவருடைய இந்த எதிர்பாராத உயிரிழப்பிற்கு உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள், அமைச்சர்கள் என பலரும் அவருக்கு இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று முன்தினம் அவரை இவருடைய உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் சரியாக 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகை மீனாவின் வீட்டிற்கு அமைச்சர் பொன்முடி அவர்கள் நேரடியாக சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement