• Apr 09 2026

கிழட்டுப் பயலே.! நீ வந்து பார்த்தியா.? பயில்வானை கிழி கிழியென கிழித்த தாமரைச்செல்வி!

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் நடித்துப் பிரபலமானவர்தான் தாமரைச்செல்வி. இவர் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகக் காணப்பட்டார். தற்போது ஒரு சில படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதி பண மோசடி செய்ததாகப் புகார் கொடுத்தார் தாமரைச்செல்வி . இது தொடர்பில் அவர் வெளியிட்ட வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது, பிரபல பத்திரிகை விமர்சகரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தாமரைச்செல்விக்கும் ஆதிக்கும் தவறான உறவு இருப்பதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாமரைச்செல்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில், "நீ எல்லாம் மூத்த பத்திரிகையாளரா? பெண்களைப் பற்றி இப்படிப் பேசுகிறாயே, உனக்கு என்ன தெரியும்? கிழட்டுப் பயலே! அந்த ஆதி என் வீட்டுக்காரரின் கால் தூசிக்கு ஈடாவாரா? அவனுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு என்று எப்படிக் குற்றம் சாட்டுகிறாய்? நீ வந்து பார்த்தியா? 

எப்போதும் பெண்களைப் பற்றியே தவறாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். இப்படிப் பணத்திற்காகப் பேசுவதற்குப் பதிலாக வேறு வேலை செய்யலாம். கிழட்டுப் பயலே, உன்னை சும்மா விடமாட்டேன். நான் ஒரு கிராமத்துப் பெண்; உன்னை எங்காவது நேரில் பார்த்தால், எந்த இடமாக இருந்தாலும் செருப்பை கழட்டி அடிப்பேன். 

உன்னுடைய குழந்தைகள் எல்லாம் உனக்குப் பிறந்ததாக இருக்காது, ஏனென்றால் உனக்குப் பெண்களைப் பிடிக்காது, ஆண்களைத்தான் பிடிக்கும். என்னுடைய வாயில் வேறு ஏதாவது வந்துவிடப் போகிறது" என மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். தற்போது அவருடைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement