தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தீவிரமாக நடைபெற்று வர நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பரப்புரையையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றார். நேற்று அவர் திருநெல்வேலியில் சென்று தன்னுடைய பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இடம்பெற்ற கரூர் சம்பவம் முதல், திரிஷா பற்றியும் ஓப்பனாக பேசியுள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி அவர் கூறுகையில், “கரூர் விஷயம் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் விஜய் மீது பழி போட வேண்டும் என்று சொல்லி, என் மீது என்ன பழி போட்டாலும் மக்கள் என்னுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். அது எப்படி என்று பலரும் அதிசயமாக பார்த்தார்கள். பல முயற்சிகள் செய்தார்கள், ஆனால் அது சரியாகவில்லை.
அதன் பின்பு படத்தை முடக்கு என்று, ஜனநாயகமாக படத்தை முடக்கினார்கள். படத்தை முடக்கினால் நான் டிஸ்டர்ப் ஆகுவேன் என்று நினைத்தார்கள். அதனை யார் செய்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

இதை அடுத்து என்ன செய்யலாம் என்று செயல்பட்டார்கள். அதில் விஜய்க்கு மட்டும் ஒரு ரூல்ஸ், ஏனைய கட்சிகளுக்கு அந்த ரூல்ஸ் இல்லை. ஆனால் அதுவும் எடுபடவில்லை.
இறுதியில் என்னுடன் இத்தனை வருஷம் ஒன்றாக இருந்தவர்களை வைத்து அவதூறு செய்தார்கள். இத்தனை வருஷமா காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்னாடி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அதுவும் எடுபடவில்லை. அது திமுகவோ, பாஜகவோ இருக்கலாம். ஆனால் யாராலும் எதுவும் செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் பேசும் போது கண்கலங்கிய காட்சியும் பலரால் கவனிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விஜய் பேசியது, அவருடைய ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது இத்தனை நாட்களாக பரவி வந்த அவதூறு கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜய்.
எனினும், இதை கவனித்த சிலர், இவை அனைத்தும் திரிஷாவை காப்பாற்ற தான்; அவர் அழுது நடிக்கிறார் என்று தங்களுடைய நெகட்டிவ் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
Listen News!