• Sep 21 2023

புது ரஜினியை பார்க்க போறீங்க .. பயில்வான் சொன்ன ஜெயிலர் விமர்சனம் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், இயக்குநர் நெல்சன் கண்டிப்பாக ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சுனில், ஜகபதி பாபு, பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராஃப் என ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையின் ஜாம்பவான்களை சும்மா அள்ளிப் போட்டு படத்தை இயக்கி உள்ளார் என பயில்வான் தெரிவித்துள்ளார் .

இதனிடையே ஜெயிலர் படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபிப்பார் என்றும் இத்தனை ஆண்டுகளாக பல இண்டஸ்ட்ரி ஹிட்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் மறுபடியும் ஒரு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜெயிலர் படத்தை கொடுக்கப் போகிறார் என்றும் அவருடன் போட்டிப் போடும் நடிகர்கள் எல்லாமே தெறித்து ஓடப் போகின்றனர் என கூறியுள்ளார்.

ஆக்‌ஷன், சென்டிமென்ட், மாஸ், அரசியல், காமெடி என எக்கச்சக்க படங்களில் ரஜினிகாந்த் நடிக்காத வேடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்து விட்டார்.

ஆனாலும், இந்த ஜெயிலர் படத்தில் முதல் முறையாக டார்க் காமெடியில் நடித்துள்ளார் ரஜினிகாந்த் என்றும் இயக்குநர் நெல்சன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய ரஜினிகாந்தை ஜெயிலர் படத்தின் மூலம் காட்ட காத்திருக்கிறார் என்பது உறுதி என பேசியுள்ளார்.

நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சிலம்பரசன் என அனைவருமே ரஜினிகாந்தின் ஸ்டைலை பின்பற்றி நடிப்பவர்கள் தான். அவர்கள் எல்லோருக்குமே ரஜினிகாந்த் தான் எப்போதுமே தலைவர்.

ஆனால், விஜய் ரசிகர்கள் இப்போ வந்த ஒரு சில படங்களை பார்த்து விட்டு ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி என பேசிட்டு பிரச்சனை பண்றவங்களுக்கு பதிலடியாகத்தான் சூப்பர் சுப்பு ஹுகும் பாடலில் உங்கப்பன் விசிலை கேட்டவன் என்றும் ஜுஜுபி பாடலில் பகையாகிப் போனால் பலியாகிப் போவ வீணா என அல்டிமேட் எச்சரிக்கை வரிகளை போட்டு இருக்கிறார் என அந்த லேட்டஸ்ட் வீடியோவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement