சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டுக்கு வந்த ரோகிணி தன்னை அவர் அடித்து துன்புறுத்தியதாக கூறுகின்றார். ஆனாலும் அதனை விஜயா மறுக்க, இடையில் பேசிய மனோஜ் 'அதுதான் நீ பாதியிலேயே மயங்கி விழுந்துட்டியே' என்று உண்மையை உளறி விடுகின்றார்.
இதனால் பெண்கள் அசோசியேஷனில் இருந்து வந்தவர், ரோகிணியை இந்த வீட்டில் வாழ விடுமாறு கூறுகின்றார். அப்படி இல்லை என்றால் நீங்கள் இருவரும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும், உங்களை சட்டரீதியாக சந்திக்கின்றேன் என்று சொல்லுகின்றார்.
ஆனாலும் விஜயா ரோகிணிக்கு டிவோஸ் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதற்கு பின் ரோகிணி மனோஜிடம் வந்து 'நான் உன்னை உண்மையாக காதலிக்கின்றேன், உன்னுடன் வாழ தான் ஆசைப்படுகிறேன்' என்று சொல்லிவிட்டு செல்கின்றார்.
அதற்கு பின்பு மனோஜின் வக்கீலை பார்த்து முத்துவும் மீனாவும் நடந்தவற்றை சொல்லுகின்றார்கள். ஆனாலும் வக்கீல் இதற்கு ஒரே தீர்வு அந்த பெண்கள் அசோசியேசனில் உள்ளவரை சந்தித்து ரோகிணி பற்றிய உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.

இன்னொரு பக்கம் பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா, நடந்தவற்றை சொல்லி புலம்பி கொண்டிருக்க, அங்கு வந்த சிந்தாமணி எல்லாத்துக்கும் பணம் கொடுத்தால் வேலை நடக்கும் என்று அவருக்கு பணம் கொடுக்குமாறு சொல்லுகின்றார். ஆனாலும் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல ஒரே ஒரு கையெழுத்து போட்டால் சரி ஒரு லட்சம் வாங்கித் தருகிறேன் என்று மீண்டும் விஜயாவை ஏமாற்றுகின்றார்.
அதற்குப் பின்பு ரவியின் ரெஸ்டாரண்டுக்கு அந்த பெண்மணியை அழைத்த விஜயா, அங்கு ரோகிணி பற்றிய உண்மையை சொல்லுகின்றார். ஆனாலும் அவர் அதனை கேட்கத் தயாராகவில்லை. இறுதியில் அவருடைய பைக்குள் பணத்தை வைக்கின்றார். அதனை அவர் வீடியோ எடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!