பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா செந்திலைப் பார்த்து பணத்தைக் கொடுக்க உங்க வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லுறார். அதுக்கு செந்தில் வேற ஒருநாள் கொடுத்துக்கலாம் என்கிறார். அதனை அடுத்து செந்தில் கொஞ்சம் நிதானமா இரு நாளைக்கு வீடு ஏதும் வாங்கிறது என்றால் என்ன பண்ணுறது பணத்துக்கு என்று கேட்கிறார். அதைக் கேட்ட மீனா படிப்படியா முன்னேறலாம்.. முதலில மாமா கிட்ட வாங்கின பணத்தைக் கொடுங்க என்கிறார்.
அதனை அடுத்து பாண்டியன் கிட்ட மீனா பணம் கொடுக்க வந்திருக்கன் என்று சொல்ல, அதைக் கேட்ட ராஜி கதிரைப் பார்த்து நாங்களும் கொடுக்கணும் என்கிறார். அந்த நேரம் பார்த்து கோமதி அங்க வந்து அவர் ஏதோ கோபத்தில சொல்லிட்டார் நீ உடனே பணத்தை திருப்பிக் கொடுக்க வந்திட்டியா என்று கேட்கிறார். மேலும், உங்க பிள்ளை தானே அவன் பணம் கொடுத்தால் உடனே வாங்கிடுவீங்களா என்று பாண்டியனைப் பார்த்துக் கேட்கிறார்.

பின் செந்தில் கொடுத்த பணத்தை பாண்டியன் வாங்கிட்டு, கதிரைப் பார்த்து நீ எப்ப பணத்தைக் கொடுக்கப் போற என்று கேட்கிறார். அதனை அடுத்து கோமதி எதுக்காக பணத்தை கொண்டு வந்து கொடுத்த என்று மீனாவைப் பார்த்துக் கேட்க, மீனா அதுக்கு நீங்க இண்டைக்கு முட்டையும் ஆப்பமும் செய்யுறன் என்று சொன்னீங்க அதுதான் பணம் கொடுக்கிற சாட்டில சாப்பிட்டுப் போக வந்தனான் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட செந்தில் மீனாவைப் பேசுறார். மறுபக்கம், பாண்டியன் சரவணனைப் பார்த்து நீ லவ் பண்ண பிள்ளையை உனக்குப் பிடிச்சிருக்கா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்கிறார். அதனை அடுத்து காந்திமதி குமாரை கோவிலில கூப்பிட்டு அரசியோட கதைக்க வைக்க பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!