• May 18 2026

ஜெய்லர், விக்ரம் மாதிரி வெற்றிப்படமாக அமையும்.! லெஜண்ட் சரவணனின் நம்பிக்கை பேச்சு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

துரை செந்தில்குமார் - லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவான 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. சென்னையில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லெஜண்ட் சரவணன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அதன்படி. படத்தின் கதை பற்றி பேசிய அவர், இந்த படத்தில் அப்பாவி அப்பா - மகள் வாழ்க்கையில் திடீரென ஒரு கேங்ஸ்டர் நுழைகிறான். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கதை. இன்றைய தலைமுறையினர் தொடங்கி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குநர் படத்தை உருவாக்கியுள்ளார்  என்று தெரிவித்தார்.

மேலும், ஜார்ஜியாவில் -14 டிகிரி குளிரில் இரண்டு வாரங்கள் படத்தின் ஷூட்டிங் நடந்ததாகவும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது அடிபட்டு நடக்கவே சிரமப்பட்ட நிலையிலும் இயக்குநர் "ஆக்ஷன்" சொன்னதும் உள்ளிருந்த எனர்ஜி வெளிப்பட்டு நடித்ததாகவும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் படம் பார்த்துவிட்டு 30 நிமிடங்கள் தொலைபேசியில் பாராட்டியதாகவும், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் படம் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

"ஜெய்லர், விக்ரம், லியோ மாதிரி மிகப்பெரிய வெற்றிப்படமாக லீடர் அமையும். குடும்பத்துடன் வந்து பாருங்கள், 100 சதவீதம் திருப்தி தருவோம்" என்று நம்பிக்கையுடன் கூறிய அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement