• May 26 2026

'அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..' வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது கூட அவருடைய கைவசம் பல திரைப்படங்கள் உள்ளன. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் உள்ளது.

நடிகை த்ரிஷா படங்களில் பிஸியாக இருந்தாலும், பிரபலங்களின் விசேட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.

மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி இடையே விவாகரத்து குறித்த செய்திகள் வெளியாகிய நிலையில், அதற்கு காரணம் த்ரிஷா என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் விஜயும் த்ரிஷாவும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டது கூட அதிகமாக பேசப்பட்டது.


இதையடுத்து நடிகை த்ரிஷாவின் ஒவ்வொரு சமூக வலைத்தள பதிவுகளும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் முன்பைவிட அதிகமாக வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், மும்பையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் நீல நிற சேலையில் த்ரிஷா அழகாக காணப்படுகிறார். 

மேலும் அவர் அந்தப் படங்களுக்கு அவர் போட்ட கேப்ஷனில் 'வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நீல நிறம் உள்ளது' என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement