• May 26 2026

நான் என்ன வாயில் இருந்து லிங்கமா எடுத்தேன்.? விளக்கம் அளித்த மன்சூர் அலிகான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான் செய்த ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. நிகழ்ச்சியின் போது தொப்பியால் மறைத்து அவர் வாயில் இருந்து எதையோ எடுத்து சட்டை பாக்கெட்டில் வைத்தது பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதனால் அவர் வாயில் இருந்து என்ன எடுத்தார் என்ற கேள்வி இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. சிலர் அவர் போதைப் பொருள் எடுத்ததாகவும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், எனது கடவாய்ப் பல்லில் பொருத்தியிருந்த பல் ‘ஷூ’ கழன்று விட்டதால் அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்தேன். அதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. எனது உடலில் எந்த போதைப் பொருளும் இல்லை.


மேலும் அந்த ஷூ இப்போ 15 ஆயிரம் ரூபா விலை போகுது. அதை தான் எடுத்து வைத்தேன். ஆனால் அதற்கு மன்சூர் அலிகான் வாயில் என்ன எடுத்து வைத்தார் என பல கேள்விகள் வைரலாகின. 

நான் என்ன வாயிலிருந்து லிங்கம் எடுக்க பிரேமானந்தாவா? இல்ல  வாயில இருந்து ரஞ்சிதாவ எடுக்க நித்தியானந்தாவா? என்னத்த சொல்லுறது நான் என சிரித்துள்ளார்

மேலும், தன்னை குற்றம்சாட்டுவோர் வேண்டுமெனில் ரத்தப் பரிசோதனை செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement