• Jan 19 2025

பாக்கியலட்சுமி சீரியலின் வில்லி விஜய்க்கு சித்தியா? விஜய் பற்றி பளீச் பேட்டி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். படத்திலும் சரி நிஜத்திலும் சரி இவர் சிறந்த மனிதராக பலராலும் புகழப்பட்ட வருகின்றார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் சித்தியான நடிகை ஷீலா பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

விஜய் பிறந்த போது நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எல்லோரும் குழந்தையை தூக்கிக் கொஞ்சிச் கொண்டு இருந்தார்கள். ஆனால் நான் தான் இறுதியாக அவனை தூக்கினேன். விஜய் அப்போ இருந்து இப்போ மட்டும் அமைதியாகவே காணப்படுகின்றார்.


எனது மகன் விக்ராந் சினிமாவில் நடிக்கும் போது, எனக்கு போன் பண்ணிய விஜய்.., ஆன்டி இன்னும் 2 வருஷம் பொறுங்க அவன்  பெரிய ஸ்டார் ஆகிடுவான் என கூறியிருந்தார்.


விஜய்க்கு அவன் தங்கச்சி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க எதிர்பாராத விதமாக மூன்றரை வயதிலேயே உயிரிழந்தார். அந்த சம்பவம் இப்போ வரைக்கும் விஜய் மனசுல அழியாம இருக்குது.

அத்தோட இந்த ஜென்மத்துல நான் தான் விஜய்க்கு சித்தி. ஆரம்பத்துல எங்களுக்கு தெரியல அவன் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவான் என்று. ஆனா இப்போ தலைவனாகவும் ஆகப் போகிறான் என பெருமிதமாக கூறியிருந்தார்.

இதேவேளை நடிகை சீலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கமலா என்ற கேரக்டரில் நடித்து  வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement