இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமின்றி திறமையான கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடிகர் அஜித்குமாருக்கும், நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷன் விருதினை ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும் நடிகையும் நடன கலைஞருமான சோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு சமையல் கலைஞரான செஃப் தாமுவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் செஃப் தாமுவின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த விருதை வென்ற செஃப் தாமு கூறுகையில், பத்மஸ்ரீ விருதை வென்றதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். தன்னை இந்த விருதுக்கு தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தேர்வு குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இதோ ...
Listen News!