• Jan 27 2025

ராஷ்மிகா இனி சொந்த காலில் நிற்க முடியாதா? அதிர்ச்சி தரும் மெடிக்கல் ரிப்போர்ட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபலமாக காணப்படும் ராஷ்மிகா மந்தனா தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார். இவருடைய வசீகரத் தோற்றம், நடிப்புத் திறமை, கவர்ச்சி, க்யூட்டான புன்னகை என அனைத்தும் இவருக்கு பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தது.

ராஷ்மிகா மந்தனா 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றார். பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருந்தார். அதன் மூலம் பாலிவூட் இந்திய நடிகை ஆகவும் கொண்டாடப்பட்டு வருகின்றார்.

இவர் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கடும் வைரலானது. படமும் பல கோடிகளை கடந்து இந்திய பாக்ஸ் ஆபீசில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.


எனினும், யார் கண் பட்டதோ தெரியவில்லை ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும் போது அவருடைய காலில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக தற்போது நடக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றார். 

சமீபத்தில் அவர் காரில் இருந்து இறங்கும்போது வீல் சேயாரில் வைத்து அவரை தள்ளிக்கொண்டு சென்ற காட்சிகள் ரசிகர்களை பெரிதும் பாதித்து இருந்தது.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இதுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை.' என புகைப்படத்துடன்  நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமடைய தமது வேண்டுதல்களையும் சமர்ப்பித்து வருகின்றார்கள்.


அதன்படி அவர் வெளியிட்ட பதிவில், இதுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை. மகாராணி படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்ந்தேன்.. அவள் தனது வலியை தனது மக்களுக்கு காட்ட மாட்டாள். நானும் அப்படித்தான்.. 

என்னுடைய பெண்கள் என்னை வெளியில் மிகவும் அழகாக காட்டினார்கள்.. ஆனால் எனக்கு உள்ளே மூன்று எலும்பு முறிவுகள் மற்றும் தசைக்கிழிவும் காணப்படுகிறது.. அது அவ்வளவு அழகாக இல்லை..

இரண்டு வாரங்களாகவே எனது காலை கீழே வைக்க முடியவில்லை.. நான் சொந்த காலை நிற்பதை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்... தயவு செய்து உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.. மக்கள் உங்களிடம் அப்படி சொல்லும் போது அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement