• Apr 25 2024

சேலை அழகில் சிலிர்க்க வைத்த புன்னகை அரசி... இவங்க 2குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்புவாங்களா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் சரி, அழகிலும் சரி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களால் புன்னகை அரசி என சிறப்பாக அழைக்கப்பட்டு வந்த இவர் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக விஜய், முரளி, பிரசாந்த், பிரபு,  எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். 


இவ்வாறாக பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த சினேகா திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் தம்பதி என்றால் அது நம்ம சினேகா - பிரசன்னா ஜோடி தான்.


அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.


இக்காதலானது கல்யாணத்திலும் சென்று சேர்ந்தது. அதாவது இருவீட்டார் சம்மதத்துடன் திரையுலகினர் புடைசூழ இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.


அதனைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு இவர்களுக்கு விஹான் என்ற அழகிய மகன் ஒருவர் பிறந்தார். இதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகா, சிவகர்த்திகேயனின் 'வேலைக்காரன்' என்ற படம் மூலம் சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார்


இந்த படத்தில் சவாலான வேடத்தில் திறம்படவும், சிறப்பாகவும் நடித்து ரசிகர்களிடமிருந்து பல பாராட்டுக்களை பெற்ற சினேகாவிற்கு இதன்பின்னர் ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைத்தன. எனினும் அந்த சமயத்தில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் மீண்டும் சினிமாவிற்கு ரெஸ்ட் விட்டார். 


அதன் பின்னர் இவருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு அழகாக மாறி உள்ளார்.

வெள்ளித்திரை, சின்னத்திரை எனப் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 


அந்த வகையில் தற்போதும் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து அழகு தேவதையாய் மிளிரும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதற்கு ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement