• Jan 15 2025

'கோட்’ பாடலை சொதப்பியதற்கு குடும்ப சொத்து பிரச்சனை காரணமா? யுவன் குறித்து பிரபலம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் 'கோட்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சொதப்பலாக இருந்து வருவதை பார்த்து ரசிகர்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தாமல் பாடல் கம்போசிங்கில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கூறிய போது ’யுவனுக்கு குடும்ப அளவில் பிரச்சினை இருப்பதாகவும் குறிப்பாக பவதாரணி இறந்த பிறகு சொத்து பிரச்சனை இருப்பதாகவும் அதனால்தான் அவரால் இசையமைப்பதில் முழுமையான கவனம் செலுத்தவில்லை என்றும் செலுத்த முடியவில்லை’ என்றும் கூறி வருகிறார்.

அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜா தற்போது துபாயில் இருப்பதும்,  அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அதனால் தான் திரைப்பட கம்போசிங்கில் அவர் முழு கவனத்துடன் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் யுவன் தரப்பினர் இதை கடுமையாக மறுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தொழில் மீது மிகுந்த பக்தி உள்ளவர் என்றும் அவர் விஜய் படத்திற்கு முழுமையான சிரத்தை எடுத்து தான் கம்போசிங் செய்துள்ளார் என்றும் கண்டிப்பாக மற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானியின் வாரிசு வாரிசு யுவன் சங்கர் ராஜா பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார் என்பதும் அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வசூலை குவித்துள்ளது என்பது போல் 'கோட்’ படத்திலும் அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement