இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில்
விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்
தேதி இன்னும் சில மாதங்கள் தள்ளி
வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான
‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல்
மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் நேரத்தில் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்த படக்குழுவினர் சில மாதங்களுக்கு ரிலீஸ்
தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் இந்த படத்தை தயாரித்த
தயாரிப்பாளரிடம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையில்
படத்தை முடித்து தருவதாக தான் பா ரஞ்சித்
ஒப்புக்கொண்டதாகவும்
ஆனால் எதிர்பார்த்ததைவிட இந்த படத்திற்காக பா.
ரஞ்சித் அதிகம் செலவு செய்து விட்டதால் அவர் தயாரிப்பாளரிடம் கூடுதலாக
செலவு செய்த 20 கோடி ரூபாயை கேட்டு
இருப்பதாகவும் அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தர மறுப்பதாகவும்
தெரிகிறது.
ஒப்பந்தப்படி பா ரஞ்சித் ஒப்புக்கொண்ட
பட்ஜெட்டில் தான் படத்தை முடித்திருக்க
வேண்டும் என்றும் 20 கோடி ரூபாய் அதிகமாக
செலவு செய்ததை தன்னிடம் அவர் கூறி அனுமதி
பெறவில்லை என்றும் எனவே கூடுதல் தொகையை
கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து காரணமாகத்தான்
படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு
வருவதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை
நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் கறாராக இருந்தால் பா ரஞ்சித்திற்கு 20 கோடி
ரூபாய் நஷ்டம் ஆகும் என்பது மட்டுமின்றி அவரது சம்பளமும் இல்லாமல் போகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து புகார்
செய்து கூடுதல் தொகையை பெற பா ரஞ்சித்
முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
Listen News!