சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யாவை அணுகியதாகவும், ஆனால் அவர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் நெல்சன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் என பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் எஸ்ஜே சூர்யாவுக்கு விருது வழங்கிய நெல்சன் அதன்பின் பேசிய போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யாவை அணுகியதாகவும், ஆனால் அவர் முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் கூறினார்.
அதற்கு விளக்கம் அளிக்க எஸ்.ஜே.சூர்யா அதிக சம்பளம் கொடுத்துவிட்டு ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க சொன்னார், நூறு மூட்டை தூக்குவதற்கு சம்பளம் கொடுத்துவிட்டு பத்து மூட்டை தூக்கினால் போதும் என்று அவர் சொன்னதால்தான் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் விரைவில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் இணைவோம் என்றும் எஸ்ஜே சூர்யா உறுதி அளித்தார்.
மேலும் எஸ்ஜே சூர்யா ’மார்க் ஆண்டனி’ மற்றும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் தனக்கு இரண்டு பரிமாணங்களை கொடுத்தது என்றும் இயக்குனர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
Listen News!