2006 ஆம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் கங்கனா ரனாவத். இவர் நடிகையாக மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அரசியல்வாதியாகவும் பன்முகத்தன்மை கொண்டு திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்தில் இடம்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எமர்ஜென்சி திரைப்படத்தை அவரை இயற்றியுள்ளதுடன் அதில் இந்திராகாந்தி வேடமிட்டு சிறப்பாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும் இதற்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான தேஜஸ், சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களின் தோல்விகளாலும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தி திரை உலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வரும் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார் கங்கனா ரனாவத்.
அதாவது, சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் படங்களில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் தான் கான் நடிகர்களுடன் நடிக்க மறுப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
Listen News!