• Jan 19 2025

First Shoot எடுக்கும் போதே ஹீரோவா பீல் பண்ணிய SK .! இது இந்துலேகாவின் எமோஷனல்.. SK ஸ்பீச்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது ஆகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். மேலும் இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அமரன் படத்திற்கு ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் இன்ஜினியர் காலேஜில் பேசிய ஸ்பீச் ஒன்று  தற்போது வைரலாகி வருகின்றது.

d_i_a

அதன்படி அவர் கூறுகையில், தானும் நான்கு வருஷம் இன்ஜினியரிங் படித்து தான் தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். படிக்கும் காலங்கள் மிகவும் ஜாலியாக இருந்தது. இப்போ நினைத்து பார்க்கும்போது இனம் புரியாத எமோஷனலாக உள்ளது.


மேஜர் முகுந்த் கேரக்டரில் நடிக்கும்போது அதிலும் முதன்முதலாக அந்த யூனிபத்தை எடுத்து போடும்போது நான் ஹீரோ போலவே பீல் பண்ணினேன். இதை எப்பவும் மறக்க மாட்டேன் அதைப்போல அந்த யூனிபத்தையும் பத்திரமாக பாதுகாப்பேன் என மேஜர் முகுந்த் பற்றியும் பெருமையாக கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த படம் இந்துலேகாவின் எமோஷனலுக்காக தான் பண்ணியது என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, சிவகார்த்திகேயன் மேடையில் பேச பேச அங்கிருந்த காலேஜ் ஸ்டுடென்ட் ஆரவாரம் செய்து தமது கரகோஷங்களை எழுப்பினர். அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் இந்த படம் வசூலில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement