• Jul 10 2025

ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த CSK.! ட்ரெய்லர் எப்போது தெரியுமா.?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவுக்கு நிறைய சாதனைகள் செய்து கொடுத்திருக்கும் அவர், தற்போது தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை விரிவாக பதிவு செய்யும் ஒரு ஆவணப்படத்தின் நாயகனாகத் திகழ்கின்றார்.


தனது IPL வாழ்க்கையை வளர்த்த தாயகம் போன்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இதனை உருவாக்கியுள்ளது. இந்த ஆவணப்படம், அஸ்வின் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட வாழ்க்கையிலிருந்து இன்றைய வெற்றிப்படியாகத் திகழும் நிலையை வரைபடமாகக் கொண்டு செல்கின்றது.

IPL தொடங்கிய தருணங்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துல்லியமான விளையாட்டு திறமையால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் அஸ்வின். CSK அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஆன அவர், தோனியின் நம்பிக்கையைப் பெற்றவர்.


அஸ்வினின் பயணத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் வருகிறது என்பது ரசிகர்களுக்கு பெரும் பரிசாகவே அமைந்துள்ளது. ஜூன் 19-ம் தேதி, CSK யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement