• May 18 2024

என்னது பிக்பாஸ் வீட்டுக்குள்ள லவ் சீன் ஆரம்பிச்சிடிச்சா... அடடே அது இவங்க தானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக்கில் விஜேவாக தன்னுடைய மீடியா பணியை ஆரம்பித்த ஒருவரே மகேஸ்வரி. அதனைத் தொடர்ந்து பின்னர் மற்ற சேனல்களிலும், சில சினிமா நிகழ்ச்சிகளிலும் தலை காட்டி வந்தார் விஜே மகேஸ்வரி.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கணவர் வீட்டில் ரொம்ப டார்ச்சர் கொடுப்பதாக சொல்லி கணவரை விவாகரத்து செய்த மகேஸ்வரி தற்போது பிக் பாஸ் போட்டியாளராக மாறி உள்ளார். 


அதாவது கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பார் விஜே மகேஸ்வரி. அதன் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் "சைலன்ட்டாக மிக்சர் தின்னவெல்லாம் தான் வரவில்லை" என்பதை ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி சொல்லி வருகிறார் விஜே மகேஸ்வரி.

அதுமட்டுமல்லாது அமுதவாணன் டாய்லெட் சென்று கொண்டிருந்த போது வாய்ஸ் கொடுத்து பயமுறுத்தியது, ஜிபி முத்து ஜிப் போடவில்லை என கலாய்த்தது, தனலட்சுமியுடன் சாம்பார் சண்டை, சாந்தி உடன் சண்டை என தொடர்ந்து இவரது வாய்ஸ் அதிகமாவக சண்டைகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.


இவரைப் போன்றே பிக்பாஸ் வீட்டில் பாதி பாலாஜி முருகதாஸ் பாதி நிரூப் மாதிரி ஒருத்தர் வந்தாரே அந்த ராம் ராமசாமி எங்கேடா காணோம் என ரசிகர்கள் தேடிப் பார்த்தால், பையன் சைலன்ட்டாக விஜே மகேஸ்வரியிடம் மட்டும் ஸ்வீட்டாக ஃபன் பண்ணி வருகிறேன் என படுக்கையில் பேசும் காட்சிகள் பலவும் பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. 


இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "ஆஹா பிக் பாஸ் சீசன் 6இலும் ஒரு லவ் டிராக் முதல் வாரத்திலேயே ஆரம்பித்து விட்டதே" எனக் கூறிக் கலாய்த்து வருகின்றனர். 

அதுஅமட்டுமல்லாது "எல்லார் கிட்டேயும் இப்படி ஸ்பெஷலா ஸ்வீட்டா பேசுறீங்களா" என விஜே மகேஸ்வரி தனது பின்னாலே திரியும் ராம் ராமசாமி பார்த்து ஓப்பனாகவே கேட்க, "உங்களிடம் மட்டும் தான் ஸ்வீட்டா பேசுறேன் சும்மா ஒரு ஃபன்னுக்கு" என ராம் ராமசாமி பேச, ரொம்பவும் கடுப்பை காட்டாமல் சைலன்ட்டாக விஜே மகேஸ்வரி இந்த விஷயத்தை டீல் செய்து வருவதை பார்த்த ரசிகர்கள் அய்யோ பத்திக்கிச்சா என கிண்டலாக கூறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அத்தோடு 2023-இல் நடைபெற உள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முதல் ஜோடியாக இவங்க இரண்டு பேரும் தான் போகப் போகின்றனர் என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.

ஏனெனில் கடந்த சீசனில் அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த காதலை பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கல்யாணம் எல்லாம் பண்ணி கன்ஃபார்ம் பண்ணியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் இந்த சீசனிலும் இப்படி ஏதாச்சு நடக்குதா என்று.

Advertisement

Advertisement