• May 05 2024

நான் நடிச்ச ரொம்ப மோசமான படம் இது தான்- ஓபனாக பேசிய இந்துஜா- அந்த நடிகரை நினைச்சா தான் பாவமா இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மேயாத மான். இப்படத்தில்  தங்கை மலர்விழியாக வந்து குத்தாட்டம் போட்டவர் தான் இந்துஜா.முதல் படத்திலேயே ஹீரோயின் பிரியா பவானி சங்கருக்கு கிடைத்த அதே வரவேற்பு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கும் கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இந்துஜா ரவிச்சந்திரன் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் கிராப் தலையுடன் வேம்பு எனும் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கலக்கி இருப்பார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியில் தனது நடிப்பிலேயே வெளியான ரொம்ப மோசமான படம் பில்லா பாண்டி என செம ஓப்பனாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


அஜித்தின் ரசிகராக பில்லா பாண்டி படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்திருப்பார். சமீபத்தில் கூட சில சினிமா நிகழ்ச்சியில் அந்த படத்தை பற்றி பெருமையாக பேசி வந்தார். இந்நிலையில், இந்த பேட்டியை அவர் பார்த்தால் அவரது நிலைமை என்னவாகும் என நெட்டிசன்கள் அவருக்கு இந்த பேட்டி வீடியோவை டேக் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். அத்தோடு இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement