• Mar 23 2025

"பராசக்தி" படக்குழு இலங்கை சென்றமைக்கு காரணம் என்ன..?

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

அமரன் பட வெற்றியின் பின்னர் சிவகார்த்திகேயன் சூர்யா நடிப்பில் வெளியாக இருந்த "புறநாநூறு" படத்தில் நடித்து வருகின்றார். சிவா படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிய பின்னர் பெயரை "பராசக்தி" என படக்குழு மாற்றியது. இப் படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் முடிவடைந்த கையுடன் படக்குழு தற்பொழுது இலங்கையில் படப்பிடிப்பினை நடாத்தி முடித்துள்ளது.


1965 களில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தினை மையமாக கொண்டு இப் படத்தின் கதை அமைந்துள்ளமையினால் இயக்குநர் சுதா கெங்கரா பழமையான இடங்களை தெரிவு செய்து படப்பிடிப்பினை நிகழ்த்தி வருகின்றார். இதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சூட்டிங் முடிந்துள்ளது.


இந்த நிலையில் இவர்கள் இலங்கை சென்று படப்பிடிப்பு செய்தமைக்கு இலங்கை ஒரு பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடக இருப்பதனால் அந்தக்காலத்து பழமை இருப்பதனால் அங்கு சென்றுள்ளதாகவும் மற்றும் நீராவி புகையிரதம் இன்னும் இலங்கையில் இருப்பதனால் அதிலும் ஒரு சில காட்சிகளை எடுப்பதற்காக சென்றமையே பிரதான காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement