தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படம் தற்போது ஒரு புதிய திருப்பத்தை சந்தித்திருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் திகதி ஏப்ரல் 10 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரீமியர் ஷோ ஏப்ரல் 9ம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதில் புதிதாக சிக்கல்கள் உருவாகி அந்த பிரீமியர் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதுவரை தமிழ் சினிமாவில் பெரிதாக பார்க்கப்படாத விதமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம், நவீன பார்வையுடன் உருவாகும் முயற்சியாக இருக்குமென படக்குழு கூறுகின்றது.
படக்குழு தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 9ம் திகதி, சென்னையில் பிரமாண்டமான பிரீமியர் ஷோ ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. இதில் சினிமா விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்பொழுது அதில் சிக்கல்கள் ஏற்பட்டதனால் அதனை நிறுத்திவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Listen News!