• May 22 2024

'வீடியோ போட்டுப் பாரு தெரியும்' அட கமலே சொல்லிட்டாரு..! விஷ்ணுவுக்கு குறும்படம் உறுதி! பிக்பாஸ் ப்ரோமோ 2

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில் பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது., அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கமல் இன்றைய தினம் நிச்சயம் குறும்படம் போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  

ஏனென்றால், விஷ்ணுவ தள்ளி விட்டது யாரு? நீங்க பாத்தீங்களா யுகேந்திரன்? என கமல் கேட்கிறார். அதன்படி விஷ்ணுவின் சந்தேகத்தை தெளிவு செய்ய முயல்கிறார் உலக நாயகன்.


இதன் அடிப்படியில், இன்றைய தினம் விஷ்ணு விவகாரம் தொடர்பில் கமல் கட்டாயம் குறும்படம் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement