• Sep 08 2025

கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூலை சல்லி சல்லியாக நொறுக்கிய வார் 2.. வெளியான ஷாக் நியூஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்தியத்  திரை உலகில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் நடிப்பில் கூலி  திரைப்படமும், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆனது.  இந்த இரண்டு படங்களுமே பான்  இந்திய படமாக வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படம் ஆயிரம் கோடிகளை வசூலிக்கும் என்ற பேச்சும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

இன்னொரு பக்கம் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டி ஆர், கியாரா அத்வானி நடிப்பில் வார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே வெளியான வார் படத்தின் முதலாவது பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் இந்தப் படமும் பெரிய ஹிட் கொடுக்கும் என்று பேசப்பட்டது.


இதைத்தொடர்ந்து வார்2  திரைப்படம் முதல் நாளில் மட்டும் 52 கோடிகளை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதேபோல் கூலி திரைப்படம் 151 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் இரண்டாவது நாளுக்கான வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 56. 50 கோடி ரூபாயை வார் 2  வசூலித்துள்ளதாம். இதன் மூலம் உலக அளவில் 108 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

 மேலும் கூலி திரைப்படம் நேற்றைய தினம் 53.50 கோடிகளை வசூலித்து இருப்பதாக நம்பத் தகுந்த வலைத்தளம் ஒன்றில் இருந்து தகவல் வெளியாகி  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement