‘தசையினை தீ சுடினும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வெங்கட். இந்தப்படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் அந்த படத்தில் காளி என்ற கேரக்டரில் நடித்ததால் அதனை தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார் வெங்கட். அதன் பின்பு காளி வெங்கட் என்பதே இவருடைய அடையாளமாக காணப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற குறும்படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அதன் பின்பு நெகிடி, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று என பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். இறுதியில் இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படமும் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. ஒரு சில படங்களில் இவர் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பு அபாரத்தனமாகவே பேசப்பட்டது.
இந்த நிலையில், சினிமாவில் தான் அதிக பாலிடிக்ஸ் இருக்கு என்று காளி வெங்கட் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், அரசியலை விட சினிமாவில் தான் அதிக அரசியல் இருக்கு. எனக்கும் பாலிடிக்ஸ் நடந்து இருக்கு, அதை நான் எப்படி எடுத்துக்கிட்டேன் என்றால் அதிகப்பட்சம் நான் சினிமாவில் இருக்கிற வரை தான் உங்களால் பாலிடிக்ஸ் பண்ண முடியும். என்கிட்ட பாலிடிக்ஸ் பண்ணவங்க கிட்ட, நேரடியா உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க.. நான் பார்த்துக்கிறேன் என்று சவாலே விட்டு இருக்கேன் என்று தெரிவித்துள்ளார்..
Listen News!