• May 19 2024

'காத்திருங்கள் இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் இருக்கு' -புதிய அறிப்பை வெளியிட்ட இளையராஜா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு சாதனை படைத்துள்ளார்.

இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அத்தோடு இவர் படங்களில் பிஸியாக இருந்தாலும், வெளிநாடுகளில் பல கச்சேரிகளை நடத்தி வருகின்றார்.

அந்த வகையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடக்க உள்ளது. இந்நிலையில் தற்போது இளையராஜா தன்னுடைய அடுத்த கச்சேரி குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

அதில் “காத்திருங்கள். ஜூன் 5 ஆம் தேதி நடக்கும் தனித்துவமான ஒரு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு மே 18 மாலை 6 மணிக்கு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இளையராஜாவின் கச்சேரி நடப்பது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement