• Sep 19 2024

விபத்தில் சிக்கிய விஷால்-தற்போது எப்படி இருக்கிறார்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

படப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷால் சிக்கிய விடயம் தறி்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கறுப்பழகன் என ரசிகர்களால் செல்லமாக வர்ணிக்கப்படும் ஒருவரே நடிகர் விஷால். “கறுப்பான கையால என்னைப் புடிச்சு..” அந்தப் பாடல் வெளியான நாள் முதல் இன்றுவரை கறுப்பும் ஓர் அழகு தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். சாதிப்பதற்கு அழகோ நிறமோ அவசியம் இல்லை திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றுவரை விளங்கி வருபவர் விஷால்.

‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சண்டக்கோழி, திமிரு, அவன் இவன், தாமிர பரணி, நான் சிகப்பு மனிதன் என இவரது திரைப்பயணம் நீண்டு கொண்டே செல்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் இவர் நடிப்பில் அடுத்ததாக லத்தி சார்ஜ் திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பில் மூன்று முறை நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

அதன் வீடியோ கூட அண்மையில் வெளிவந்தது.அத்தோடு லத்தி சார்ஜ் படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் குணமடைந்து விஷால் வீடு திரும்புவார் என தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement