• Sep 19 2024

கண்ணம்மாவை கொல்ல முயன்ற வெண்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

வெண்பா சூப்பர் மார்க்கெட்டிங் சௌந்தர்யா வந்து வழிமறிக்கிறார். வெண்பா எப்படியாவது தப்பி ஓட முயற்சி செய்ய செல்லும் இடமெல்லாம் செக் வைக்கிறார் சௌந்தர்யா.

இதன் பிறகு கண்ணம்மாவை கொல்ல முயற்சி செய்த விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும் அந்த விஷயம் தெரிஞ்சதும் நான் ஆடிப் போயிட்டேன். எனக்கு வந்த கோபத்துக்கு அன்னைக்கு உன் கழுத்தை நிறுத்தி கொன்னு இருப்பேன் பாரதி தடுத்தான். அத்தோடு இனியும் நீ தப்பிக்க முடியாது நான் உன்னை சும்மா விட மாட்டேன். எனவே வெண்பாவின் கழுத்தை நெரிக்கிறார்.இதன் பிறகு உங்க அம்மாவோட பழகிய விஷயத்துக்காக உன்ன உயிரோட விடுறேன் என வெண்பாவை தள்ளி விடுகிறார்.

பின்னர் வெண்பா அங்கிருந்து கிளம்பிச் செல்ல அவரை கூப்பிட்டு பளார் என அறை விடுகிறார். வீட்டுக்கு போன வெண்பா வழியில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் ஹாஸ்பிடலுக்கு போய் வீட்டுக்கு திரும்பிய வேணுமிடம் அகிலன் நடந்த விஷயங்களை சொல்ல அவர் தனக்கு ஏதாவது ஆவதற்குள் பாரதி மற்றும் கண்ணம்மா ஒன்று சேர வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு வெண்பா வீட்டில் காலிங் பெல் அடிக்க திறந்து பார்க்கையில் ரோஹித் வந்து நிற்கிறார். உங்களுக்கு இன்னொரு சாக்கும் இருக்கு என சொல்ல காரில் இருந்து ஷர்மிளா இறங்கி உள்ளே வருகிறார். அம்மாவை பார்த்ததும் வெண்பா அதிர்ச்சடைகிறார்.

திரும்பவும் காலிங் பெல் அடிக்க பின்னாடியே சௌந்தர்யா வர வெண்பாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வந்தவர் சும்மா இல்லாமல் நீங்க அமெரிக்கால இருந்து வந்ததும் வெண்பாவுக்கு கல்யாணம் என்று சொன்னீர்கள். இரண்டு மூன்று நாள்ல ஆடி மாசம் முடிய போது கல்யாணம் எப்போ என கேட்க இரண்டு மூன்நு நாள்ல எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் என்கேஜ்மென்ட் தான் செய்ய முடியும் என ஷர்மிளா சொல்ல அப்போ எங்கேஜ்மென்ட் நடத்திடலாம் என சௌந்தர்யா கூறுகிறார்.

உடனே ஷர்மிளாவும் இது நல்ல ஐடியா என எங்கேஜ்மென்ட் நடத்த சம்மதிக்கிறார். இதனால் வெண்பா பேரதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement