• Aug 22 2025

அண்ணாமலையார் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த சூரி..!வைரலாகும் வீடியோ..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் தற்போது ஹீரோவாக வளர்ந்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான "மாமன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில்  குடும்பத்துடன் சாமி தரிசனம்  செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சுக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


மேலும் சூரி தனது கடின உழைப்பின் மூலம் வளர்ந்து கொண்டே செல்கின்றார். இவர் பல தடைகள் , சங்கடங்கள் மற்றும் ஏமாற்றம் என பலவற்றை கடந்து வாழ்வில் உண்மையுடனும்  நேர்மையுடனும் தனது பயணத்தை தொடர்ந்து செல்கின்றார். விடுதலை 1,2  ,கருடன் ,மாமன் எனப்பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள்  மத்தியில் ஹீரோவாக நிலைத்து விட்டார் என்று தான் கூறமுடியும். 


தற்போது புதிய படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடத்தை தொடர்ந்து சூரி குடும்பதினருடன் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற சாமி தர்சனம் செய்துள்ளார்.மேலும் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் " மண்டாடி" திரைப்படத்தில் சூரி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement