• May 19 2024

Jailer படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ஜெயிலர்.இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைத்துள்ள ஜெயிலர் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.இந்நிலையில், இப்படம் வெளிவந்து 6 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 395 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகின்றது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர்.


இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து  ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.


இதில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் விநாயகன். இவரை நாம் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் தான் வில்லனாக நடித்திருந்தார். அதனை அடுத்து மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் என்று கூறப்படுகின்றது.




Advertisement

Advertisement