வளர்ந்து வரும் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர் விமல் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி, குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடம் படத்திலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் மூலமாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
இதனையடுத்து பல குறைந்த நிதிநிலை (budget) தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த இவர் நடிப்பில் தற்போது 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படம் உருவாக்கி வருகின்றது.
இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ், சௌந்தர ராஜா எனப் பலர் விமலுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஒடியன் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படமானது வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!