• May 18 2025

நான் தமிழன்டா;விழா மேடையில் அல்லு அர்ஜுன் பேசிய வீடியோ வைரல்.

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பான் இந்திய திரைப்படங்கள் பேசுபொருளாகி தொடர் வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய நிலைமையில் பான் இந்திய ஸ்டார் ஆக அனைவருக்கும் அறிமுகமாகமானவர் நடிகர் அல்லு அர்ஜுன்.ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என பல்முக திறமையை கொண்ட இவர் சமீபத்தில் வெளியான புஸ்பா திரைப்படத்தின் ஊடக பான் இந்திய ஸ்டார் ஆக உருவெடுத்துள்ளார்.


இந்நிலையில் சமூக ஊடகங்களில் அல்லு அர்ஜுன் விழா ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அக் காணொளியில் நானும் தமிழன் தான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டிலில் தானென்றும் எங்கு சென்றாலும் கிடைக்கும் பெயரும் பாராட்டும் இங்கு கிடைக்காத போது மகிழ்ச்சி குறைவுதான் என்று குறிப்பிட்டுள்ளதுடன் இங்கு கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்று பேசியுள்ளார்.


அல்லு அர்ஜுன் 8 ஏப்ரல் 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் என்பதை நாமறிந்த நிலையில் அவர் தன் இளமைக்காலத்தை தமிழ் நாட்டில் தான் கழித்தார் என்பதை இக் காணொளியின் ஊடக அறியக்கூடியதாய் இருக்கிறது.எங்கு சென்றாலும் குடும்பம் இரசிக்கவில்லை எனில் அது வெற்றியில்லை என தமிழ்நாட்டை குடும்பத்திற்கு ஒப்பிட்டு பேசியது தமிழ் இரசிகர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறது எனலாம்.

Advertisement

Advertisement