• May 20 2024

சிம்புவைத் தொடர்ந்து உடல் எடையை மோசமாக குறைத்த விக்ரம்- அடடே இத்தனை கிலோ குறைத்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விக்ரம். இவர் தற்பொழுது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். பீரியட் படமாக தயாராகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.தற்போது தங்கலான் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், "விக்ரம் சார் மிக கடினமாக உழைப்பார். அவர் தங்கலான் படத்திற்காக 35 கிலோ குறைத்தார். திரைப்படத்திற்காக தன்னை தானே வருத்திகிட்டு வேலை செய்பவர்" என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement