• May 13 2024

இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு விடுத்த விக்ரம் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமான உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

மல்டி ஸ்டாரேர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழ் திரை உலகின் முக்கிய நட்சத்திரங்களை அழைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல், ரஜினி, விஜய், சூர்யா ஆகிய நான்கு முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் விழா நடைபெற இருப்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement