• Sep 20 2024

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்ரம் பட நடிகர் -அட இவர் ரொம்ப பெரிய பிரபலமாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்றும் பிறந்த நாளான இன்று செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

அத்தோடு இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலைக் கேட்ட விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதோடு விஜய் குறித்த புகைப்படங்களை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement