• Dec 09 2022

பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட விஜய்யின் வாரிசு படம்-வெளியான அதிரடி அப்டேட்

Listen News!
Aishu / 2 months ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவரது நடிடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் படமானது மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியானது ஆனால் அப்படம் மோசமான விமர்சனஙகளையே பெற்றது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வாரிசு படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.


இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் இதுவரை இல்லாதளவு திரைப்படங்களிலே அதிக விலைக்கு வாங்கப்பட்ட திரைப்படம் வாரிசு தான் என அறிவித்துள்ளனர்.