• Jun 29 2024

5 நாட்கள் மரத்தின் மீது ஏறி இருந்த விஜயகாந்த்- அடடே.. இது தான் கரணமா?- இப்படியெல்லாம் பண்ணியிருக்காரா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் விஜயகாந்த். இவரது நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கஜேந்திரா. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில்,உருவான இப்படத்தில் சரத் பாபு, ராதா ரவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியதாவது விஜயகாந்துடன் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவே இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படம் இயக்கிவிட்டேன்.விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.

எனக்கு அவரின் நடிப்பும், படங்களும் மிகவும் பிடிக்கும். அவரிடம் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறேன். அப்போது தான் கஜேந்திரா படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ஒரு மிக சிறந்த அனுபவம். அவரால் ஒரு சின்ன பிரச்சனை கூட ஏற்படாது.


வேறு யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார். அவரை போன்ற ஒரு நபரை பார்க்கவே முடியாது. அந்த படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியில், காட்டுப்பகுதியில் மரத்தின் மீது நின்றுகொண்டு, பறந்து பறந்து அடிக்கும் படி இருக்கும்.ஒரு முறை மரத்தில் இருந்து கீழே இறங்கினால், மீண்டும் எல்லாவற்றையும் செட் பண்ண வேண்டும் என்பதற்காக, காலையில் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, மரத்தில் ஏறினால், இரவு தான் இறங்குவார்.

இதே போல தான் 5 நாட்களும் நடந்தது. டூப் கூட போடவில்லை. முகத்தில் ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நடித்து கொடுத்தார். ஸ்டண்ட் மாஸ்டரே வியந்து பாராட்டினார் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement