கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் வெற்றி கொடி கட்டி ஒரு பான் இந்தியா ஸ்டாராக இருப்பவர் நடிகை சமந்தா. தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் இடம் பிடித்தார்.இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்ப தொடங்கினார்.சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா-வை 2022 ஆம் ஆண்டு பிரிந்தார்.இதனை அடுத்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார்.பின்னர் அதிலிருந்து மீண்டதும் நடிக்க ஆரம்பித்தார். தற்பொழுது விஜய்தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில நடித்து முடித்துள்ளார்.
குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.
இந்த நிலையில் குஷி பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இவருடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்வதும் உண்டு. அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட போட்டோக்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!