• Jun 26 2024

ராதிகாவைப் பார்க்க வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி- கோடீஸ்வரன் சேரிடம் கெஞ்சி அழும் பாக்கியா-Baakiyalakshmi Serial

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி ராதிகாவிடம் ஒரு டொக்கிமென்டைக் கொடுப்பதற்காக அவருடைய ஆபீஸிற்கு வந்திருக்கின்றார். அப்போது பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு இவன் ஒரு இடம் விடாமல் இங்கையும் வந்திட்டானா, என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருக்கும் போது ராதிகா வருகின்றார்.

அப்போது ராதிகாவிடம் என்ன ஆச்சு எதுக்காக இவன் வந்திருக்கான் என்று கேட்கும் போது ராதிகா, கான்டீனில் சமையல் சொதப்பியதை சொல்ல கோபி சந்தோஷப்படுவதோடு அவகிட்ட இருந்து கான்ராக்டை பறிக்கனும் என்று சொல்ல ராதிகா, அது தான் கோடீஸ்வரன் சேர் கிட்ட சொல்லப்போறேன் என்று சொல்கின்றார்.


மறுபுறம் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழ பழனிச்சாமி அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.நீங்க போய் அந்த சேரர் கிட்ட பேசுங்க எல்லாம் சரி ஆகிடும் எவ்வளவு விஷயத்தை பார்த்தவங்க நீங்க இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார்.தொடர்ந்து கோபியையும் ராதிகாவையும் கண்ட பழனிச்சாமி போய் பேசுகின்றார்.

அப்போது ராதிகாவைப் பார்த்ததும் வணக்கம் வைத்து விட்டு உங்களைப் பார்த்தது சந்தோஷம் என்று சொல்ல கோபி அதிர்ச்சியில் உறைகின்றார். பின்னர் பழனிச்சாமி போனதும் ராதிகா நீங்க சொல்லும் போது நம்பல, ஆனால் இவங்களுக்குள்ள ஏதோ இருக்கு, பாக்கியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் வந்து நிக்கிறாரு என்று சொல்ல கோபி சந்தோஷப்படுகின்றார்.

தொடர்ந்து இருவரும் கோடீஸ்வரன் சேர் கிட்ட பேசுவதற்காக போகின்றனர். அங்கே பாக்கியா தெரியாமல் செய்து விட்டதாகவும் இனிமேல் இப்படி தவறு செய்யமாட்டேன் என்றும் சொல்கிறார்.ஆனால் ராதிகா அது தான் தப்பு நடந்திடுச்சே என்று போட்டுக் கொடுக்கின்றார். இருப்பினும் அவர் இது தான் கடைசி, இதுக்கு தப்ப ஏதும் நடந்திடக்கூடாது என்று பாக்கியாவை மன்னித்து அனு்பி விடுகின்றார்.


இதனால் பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்கின்றார். உங்களால் தான் நான் போய் பேசினேன் இப்போ சரி ஆகிடுச்சு என்று சொல்லி விட்டு தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். அப்போது செல்வி தன்னுடைய கணவன் தன் பிள்ளைகளை அடித்ததால் தான் இப்பிடிப் பண்ணிட்டேன் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து கோபி மயூவோடு இருந்து விளையாடிட்டு இருக்கும் போது ராதிகா வருகின்றார். ராதிகாவிடம் என்னாச்சு என்று விசாரிக்க, அவர் நடந்ததைச் சொல்கின்றார். அப்போது கோபி, அவ தடுமாற ஆரம்பிச்சிட்டா ஒரு நாள் எல்லாத்தையும் இழந்து நிற்பாள், அதை நாங்க கண்டிப்பா பார்க்கத் தான் போகின்றோம் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement