• Mar 26 2025

ரோகிணியின் ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த முத்து...! கோபத்தின் உச்சியில் விஜயா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று,பரசு அங்கிள் சம்மந்தி கிட்ட வந்து சாப்பாடு எல்லாம் ரெடி ஆகிட்டா என்று கேக்கிறார்.அதுக்கு சம்மந்தி அதெல்லாம் ரெடியாகிட்டு என்கிறார். அதைத் தொடர்ந்து பரசு அங்கிள் எல்லாம் சரி சம்மந்தி கடைசில தான் கொஞ்சம் பிரச்சனையாகப் போய்ட்டு என்று சொல்லுறார். அதைக் கேட்ட சம்மந்தி ஏன் என்ன ஆச்சு என்று கேக்கிறார்.

அதுக்கு பரசு அங்கிள் கலியாண வீட்ட திருடங்க வந்திட்டாங்க என்று சொல்லுறார். அதற்கு சம்மந்தி இந்த மாதிரி திருட்டுக் கும்பலுங்க எல்லா கலியாண வீட்டிலையும் வந்திருவாங்க என்கிறார். மேலும் அவங்கள எல்லாம் சும்மாவா விட்டீங்க என்று கேக்கிறார். அதுக்கு பரசு அங்கிள் இல்ல சம்மந்தி அந்த திருடங்கள என்ர பிரெண்டோட மகனும் மருமகளும் பிடிச்சு அடிச்சிட்டாங்க என்று சொல்லுறார்.


சம்மந்தி நான் அவங்கள உடனே பாக்கணும் என்று சொல்லுறார். மேலும் அவங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்ட வேண்டும் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பரசு அங்கிள் சம்மந்திய முத்து கிட்ட கூட்டிக் கொண்டுபோறார். அப்ப சம்மந்தியப் பார்த்த முத்துவும் மீனாவும் ஷாக் ஆகுறார்கள்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை எப்புடியோ நல்ல படியா கலியாணம் முடிஞ்சிருச்சு என்று சொல்லுறார். அதுக்கு விஜயா ஆனாலும் கலியாண வீட்டு மாப்பிள வசதியில்லப் போல என்றார். இதனை அடுத்து முத்து சம்மந்திய வீட்ட கூட்டிக்கொண்டு வாறார். அதைப் பார்த்த ரோகிணி ஷாக் ஆகுறாள். இது தான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement