• Apr 16 2025

செந்திலின் பிறந்தநாளுக்கு சப்ரைஸ் செய்த பிரபல நடிகர்...! யார் தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நடிகர் செந்தில் தமிழ் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தார். இவர் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருந்தார். குறிப்பாக,கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியின் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்கள் இன்று வரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகின்றது.


இத்தகைய செந்தில் தனது 74வது பிறந்த நாளை தற்பொழுது குடும்பத்தினருடன் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். இவரது திறமைக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஒன்று கூடி அவருக்கு கோலாகலமான பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்விழாவின் சிறப்பான தருணமாக, பிரபல நகைச்சுவை நடிகர் கிங் காங் நேரில் சென்று செந்திலுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதன் போது, ‘செந்தில் சார் என்றுமே புன்னகையின் மன்னன்’ எனவும் கூறியிருந்தார்.


மேலும், "நான் சினிமாவிற்கு வந்த போது அவர் தான் என் ரோல்மாடல் என்றதுடன் பல நாட்கள் அவரோடு பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது" எனவும் கிங் காங் கூறியுள்ளார். இதனைப் பார்த்த செந்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement